Saturday, 9 July 2011




        உடல் நலிவுற்றிருந்த ஈழத்தின் முது பெரும் தமிழறிஞர் 79 வயது கார்த்திகேசு சிவத்தம்பி, இருதயம் செயலிழந்துவிட்ட நிலையில் 6-ந் தேதி இரவு 8.20 மணிக்கு கொழும்பிலுள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு உலகம் முழு வதுமுள்ள தமிழறிஞர்களும் அரசியல்தலைவர் களும் சொல்லொணா துயரம் கொண்டனர். 

சிவத்தம்பியின் மரண செய்தியறிந்த கலைஞர்,’’""தமிழ்மொழி இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் சிவத்தம்பி. திறனாய்வா ளர். சமூகவியலாளர். அரசியல் சிந்தனையா ளர்''’’என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராம தாஸ்,’’""வீரம் விளையும் வல்வெட்டித்துறையில் பிறந்தவர் சிவத்தம்பி. தமிழில் மட்டுமன்றி ஆங்கில இலக்கியத்திலும் புலமை கொண்டவர். அவரது மறைவு தமிழுக்கும் உலகத்தமிழ் சமூகத்துக்கும் பெரிய இழப்பு''’என்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ""சிவத்தம்பி "தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை... பலர் எழுதியுள்ளனர்' என்கிற கருத்தை முன்வைத்தவர். பிரபா கரனுக்கும் கவிஞர் காசிஆனந்தனுக்கும் உறவினரான சிவத்தம்பியின் மறைவு பேரிழப்பு''’’என்கிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட் டிற்கு சிவத்தம்பியை அழைத்துவந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திர னிடம் பேசியபோது,’’""செம்மொழி மாநாட்டில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என பல நெருக்கடிகளும் எதிர்ப்பு களும் வந்தபோதும் அதனையெல்லாம் துச்சமென தவிர்த்து மாநாட்டில் கலந்து கொண்டார் சிவத்தம்பி. காரணம், கலைஞர் மீதும் தமிழ்மீதும் அவருக்கு இருந்த பற்று தல்தான். இலங்கையில் வரதராஜபெருமாள் முதல்வராக அறிவிக்கப்பட்ட போது, விடுதலைப்புலிகள் சார் பில் முதல்வர் பதவிக்கு நிறுத்துவ தாக இருந்தால் யாரை நிறுத்துவீர் கள் என பிரபாகரனிடம் சிலர் கேட்டபோது... கொஞ்சம்கூட யோசிக்காமல் "சிவத்தம்பி' என்றார் பிரபாகரன். பல்வேறு இழப்புகளுக்கு ஈழத் தமிழினம் ஆட்பட்டிருந்த போதிலும் சிவத் தம்பியின் அறிவுச் செல்வத்தை பாதுகாத்தே வருகிறார்கள்''’’என்கிறார்.

""சிவத்தம்பியின் நுண்மாண் நுழைப்புல ஆற்றல், அவர் எழுதிய பற்பல நூல்கள் அனைத் தும் தமிழ் நல்லுலகத்திற்கு காணிக்கையாக்கப் பட்ட அருபெரும் செல்வங்கள்'' என்கிறார் உணர்வு மேலிட தி.க.பொதுச்செயலாளர் கி.வீரமணி. சிவத்தம்பியோடு பழகியுள்ள விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், ""அரசியல் தளத்தில் பாலசிங்கம் போல இலக்கியத் தளத்தில் சிவத்தம்பி என்று சொல்கிற அளவுக்கு புலிகள் இயக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்'' என்கிறார்.


 200-க்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகள், 70-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி தமிழுக்கு தொண்டு செய்துள்ள சிவத்தம்பியின் மறைவை ஜீர ணிக்க முடியாமல் விக் கித்து நிற்கிறது தமிழ் உலகம்.


-ஆர்.இளையசெல்வ

No comments:

Post a Comment