அறிவுலகின் ஒப்பற்ற பெருமனிதர் சிவத்தம்பி
பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி நம்மை விட்டுப்பிரிந்தாரெ ன்ற செய்தி பேரிடியாக இரு ந்தது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தமிழ் ஊற்றாகத் திகழ்ந்த பேராசிரியர் சிவதம்பி ஐயா, ஊடகத்துறையினர் உட்பட சகலருக்கும் மொழி ஆலோசனை வழங்கி இறுதிவரை தமிழுக்காய் தன்னை அர்ப்ப ணித்த மாபெரும் அறிஞர்.சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ்ச் சினிமாவரை பல்வேறு துறை களில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தப் பெருந்தகை, தமிழின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சகராகப் போற்றப்பட்டவர்.
1932ம் ஆண்டு 5ம் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிவத் தம்பி பிறந்தார். கரவெட்டி விக்னேஸ்வராவில் தனது கல்வியைத் தொட ர்ந்த இவர், கொழும்பு சாஹிராக் கல்லூரியில் உயர்கல்வி கற்று பல்க லைக்கழகம் சென்று பேராசிரியராக தேறினார். என்றாலும் இவரது ஆளு மையும் கல்வித் திறமையும் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழ கங்களைத் தட்டியது. அவுஸ்திரேலியா, கனடா, லண்டன் பல்கலைக் கழகங்களில் பலபீடங்களின் ஆலோசகராகப் பணிபுரிந்தார். இங்கிலா ந்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் 'பண்டைத் தமிழகத்தில் நாடகம்' எனும் தலைப்பில் ஆய்வுகளை மேற்கொண்ட சிவத்தம்பி ஐயா, முனை வர் பட்டத்தைப் பெற்றார்.
உலகிலுள்ள தமிழர்களெல்லாம் பெருமைப்படுமளவுக்கு உச்சத்தைத் தொட்ட இந்தப் பெருந்தகை, சாதாரண மனிதனாகவே தன்னைக்காட்டிக் கொண் டவர். வித்துவச்செருக்கோ தலைக்கனமோ இல்லாமல் தன்னிலை அறி ந்து உலகம் பரந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நல்லாசானாக நடமா டிய இந்த மேதை, நம்மத்தியில் இல்லாமல் போனது ஈடுசெய்ய முடியா தது.
இலங்கைத் தமிழர் யார்? எவர்?" "தொல் காப்பியமும் கவிதையும்", "பண் டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" "மதமும் மானுடமும்" உட்பட 70க் கும் மேற்பட்ட நூல்களை பேராசிரியர் சிவத்தம்பி எழுதி குவித்து விட் டுத்தான் விடைபெற்றுச் சென்றிருக்கிறார்.
20ம் நூற்றாண்டில் உலகில் புலமைமிக்க கல்விமான்கள் வரிசையில் இடம் பிடித்தவர் என்பது இலங்கையராகிய நமக்கெல்லாம் பெருமை சேர்க் கும் விடயம் உலகில் உள்ள 2000 புலமைமிக்கோரில் நமது பேராசிரிய ரும் ஒருவராக இருக்கிறார் என்பது நினைத்துக் கூடப்பார்க்க முடியா தது.
சிவத்தம்பி ஐயாவிடம் இருந்த பணிவும், அறிவும், பண்பும், அனுபவமும் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமை ந்திருந்தன எனலாம்.
சிறு பதவியொன்றை வைத்துக்கொண்டு பந்தாகாட்டுகின்ற இந்த உலகில், ஒரு ஒப்பற்ற பெருந்தகையாக பேராசிரியர் சிவத்தம்பி விளங்கினார்.
பேராசிரியரின் விரிவுரை மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆங்கிலம், தமிழ், மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஒருவர், மிக எளிய மொழி நடைகளில் (இலகு மொழியில்) தனது விரிவுரைகளை நடத்தி னார். சுருக்கமாகச் சொன்னால் கற்பித்தலில் உரையாடல் முறையை இவர் பின்பற்றியதால், ஏராளமான கல்விமான்கள் இவர் மூலம் உருவா கினர்.
இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர், எப்போதும் மாக்சிசக் கருத்து க்களை முன்னிறுத்திச் செயற்படுபவர். எது சரியென்றுபடுகிறதோ அதனை உணர்வுபூர்வமாகத் தெரிவிக்கும் ஆற்றல் கொண்டவர்.
பேராசிரியர் சிவத்தம்பி ஈழத்து நவீன நாடக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தவர். பலமேடை நாடகங்களை நெறிப்படுத்தியவர். அதே நேரம், இலங்கை வானொலியில் நாடகங்களை நெறிப்படுத்திப் பெருமை சேர்த்தவர்.
நெறியாள்கையாளனாக, நடிகனாக, ஒப்பனையாளராக, ஒளி அமைப்பாள ராக, நாடக ஆலோசகராக, பாராளுமன்ற உரை பெயர்ப்பாளராக, பல் ஆளுமை கொண்ட சிவத்தம்பி ஐயா, எம்மை விட்டுப் பிரிந்தாலும், மக்கள் மத்தியில் பல்லாண்டு காலம் வாழும் மாமனிதன்.
"தமிழை வளர்த்தவர்கள் யாவரும் இல்லை; எல்லோரும் தமிழால் வளர்ந்த வர்களே" என சிவத்தம்பி ஐயா அடிக்கடி கூறுவார். தமிழ் மீதும் தமி ழினம் மீதும் அவருக்கிருந்த பற்றை அவர் வித்துவச் செருக்கில்லாமல் சொன்னதுதான் இது.
பிறமொழிச் சொற்களை தமிழாக்குவதில் பேராசிரியர் அவர்கள் பெரும் பங்காற்றி இருக்கிறார். அரைகுறை ஆங்கிலத்தைப் படித்துவிட்டு தமிழ் என்ன மொழியா? எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெ ல்லாம் தனது எழுத்தின் மூலம் பதிலடி கொடுத்தவர் பேராசிரியர் சிவத் தம்பி.
சில ஆங்கில சொற்களில் மொழிபெயர்ப்புக்களுக்காக தமிழில் புதிய பதங் களை அறிமுகப்படுத்தினார். உதாரணமாக ஞிolலீ என்பதற்கு 'வகிபாகம்' என்றும் பிலீசீinisசீ என்ற சொல்லை 'பெண்ணிலைவாதம்' என்றும் அவர் தமிழ்ப்படுத்தினார். இதே போல் விளி என்பதனை இறுவட்டு என்னும் பதத்தை அறிமுகம் செய்தார். இப்போது இவை உலகில் வழக் கில் உள்ளன.
உலகத் தமிழ் மாநாடு உட்பட பல்வேறு மாநாடுகளில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பேராசிரியர் சமர்ப்பித்துள்ளார். இத்தகைய பெருந்தகை க்கு கோவை செம்மொழி மாநாட்டில் கிடைத்த கெளரவமும் இறுதி யான பெரும் கெளரவமாக அமைந்தது.
இந்தப் பேரறிவாளனின் இழப்பை ஈடுசெய்வதென்பது இப்போதைக்கு எவ ராலும் முடியாத காரியம். என்றாலும் அவரால் உருவாக்கப்பட்ட கல் விச் சமூகமும், கல்விமான்களும் இதனை நிரப்ப வேண்டும். வாழ்நாள் முழுவதும் கல்விச் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த பேராசிரியரு க்கு தினகரன் சிரம் தாழ்த்தி இறுதி அஞ்சலி செலுத்துகிறது
No comments:
Post a Comment