Thursday, 7 July 2011

தமிழருக்கு கிடைத்த ஆய்வுப் பொக்கி'ம்

தமிழருக்கு கிடைத்த ஆய்வுப் பொக்கி'ம்
பேராசிரியர் க. கைலாசபதி யின் ஆய்வு முறைக்கும், எழுத்துக்களுக்கும் தமிழ் நாட்டில் மரியாதை ஏற்பட்டது. அதன் பின்னர் உச்சமாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு தமிழக அரசு வி.க. விருது வழங்கி கெளரவம் செய்தது. அத்தோடு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவம் செய்தது என பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா கூறினார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆக்கங்கள் செயற்பாடுகளை பற்றிய ஒரு பதிகையாக கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் ஏற்பாடு செய்த கரவை விக்னேஸ்வரா வழிவந்த “ஒரு தமிழ் அறுவடை” என்ற நூலின் வெளியீடு அதன் தலைவர் சட்டத்தரணி வே. விமலராஜா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.
மங்கள விளக்கேற்றல், கல்லூரி கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து என்பவற்றுடன் சங்க உதவி செயலாளர் எழுத்தாளர் திருமதி சந்திரகாந்த முருகானந்தன் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது.
விழாத் தலைவரின் தலைமையுரையை தொடர்ந்து நூல் அறிமுகத்தை சட்டத்தரணி ஜீ. இராஜகுலேந்திரா நிகழ்த்த நூல்களின் முதற்பிரதிகளை சங்க காப்பாளர்கள் கே. கனகசபை, திருமதி ஷாந்தி பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டனர்.
சங்க செயலாளர் வீ. ஏ. திருஞான சுந்தரத்துக்கு கொழும்பு கம்பன் கழகம் இவ்வாண்டு “ஊடகத்துறைப் பேராளன்” என்ற விருது வழங்கியதை பாராட்டு முகமாக சங்கத்தின் சார்பில் தலைவர் சட்டத்தரணி வே. விமலராஜா பொன்னாடை போர்த்திக் கெளரவம் செய்ய, அதனைத் தொடர்ந்து மருத்துவ கலாநிதி ஜின்னா ஷெரிப்தீன், ஆசிரியை தயாநிதி செல்வநாயகம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
பாராட்டுரை வழங்கிய திருமதி சந்திரகாந்த முருகானந்தம்; எமது செயலாளர் வீ. ஏ. திருஞான சுந்தரம் வீரகேசரியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்து வானொலியில் தடம் பதித்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் தமிழ்ச் சேவைப் பிரதி பணிப்பாளராக உயர் பதவி வகித்தவர். இவருக்கு கொழும்பு கம்பன் கழகம் இவ்வாண்டு ‘ஊடகத்துறைப் பேராளன்’ என்று பட்டம் வழங்கி கெளரவித்தமை குறித்து கரவை விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பெருமை கொள்வதோடு அவரை வாழ்த்தி மகிழ்கிறது என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா,
நான் பேராசிரியர் கா. சிவத்தம்பியிடம் தொடர்ந்து நான்கு வருடங்கள் கல்வி பயின்றுள்ளேன். மற்றைய விரிவுரையாளர்கள் ஒரு மணி நேரம் பல்கலைக்கழக வகுப்பை நடத்த சிவத்தம்பி சேர் ஒன்றே முக்கால் மணித்தியாலங்கள் நடத்துவார், திணைக் கோட்பாட்டை எம் மனதில் பதிய வைத்தவர். கம்பனை எக்ஸ்ரே எடுத்து எமக்கு தெள்ளென உணர வைத்தவர். அவர் நடத்தும் வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கும். மிக ஆழமாக கற்போம்.
ஆய்வின் நெறிமுறைகளை அவரிடமே பயின்றேன். ஆய்வு ஒரு பொறியாக இருந்தது. ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க முயன்றார். சொல்வதில் புதுமையான நோக்கிருந்தது. அவரது ஆய்வுகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.
பேராசிரியர் கா. சிவத்தம்பி கரவெட்டி மேற்கைச் சேர்ந்தவர். நான் கிழக்கு. கரவெட்டியின் வாழ்வியல் தான் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல், எத்தனை வேறுபாடுகள். முரண்பாடுகள் இருந்தாலும் எளிமையான, செம்மையான வாழ்வே கரவெட்டியில் உண்டு. நவீன இலக்கியத்தின் பக்கம் தலையை நீட்டதாவன் நான். நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றோரது படைப்புகளை தான் வாசிப்பேன். ஜெயகாந்தன், காண்டேகர் போன்றோரின் படைப்புகளை படிக்க என்னை தூண்டியவர் பேராசியரி கா. சிவத்தம்பி தான். இன்றும் எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பேன் என்றார். சிறப்புரையாற்றிய - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பாராட்டுகளும், கெளரவங்களும் பேராசிரியருக்கு பல மட்டங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. இப்பாராட்டு விழா வேறு படுகிறது. சொந்த ஊரவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்துகின்றனர். அறிஞர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் சொந்த ஊரில் மரியாதை இருப்பதில்லை, ஆனால் பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு பெரியளவில் விழா எடுத்திருப்பது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்றது. பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் அவர் தகுந்தவர்தான்.
இதற்குக் காரணமாக இருப்பது அவரது அறிவு, ஆளுமைதான். பாராட்டுவதற்குப் பாராட்டுபவருக்குத் தகுதி இருக்க வேண்டும். பாராட்டுகளுக்கும் அத்தோடு விமர்சனத்துக்கும் ஆளானவர் பேராசிரியர். கல்லெறி, பொல்லெறிப்பட்டவர். இவையெல்லாம் அவர் காய்த்த மரமென்பதன் அடையாளமே. அறிவாளுமை மிகவும் அத்தியாவசியமானது.
“ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேரறிவாளன் திரு” எனத் திருவள்ளுவர் கூறி இருக்கிறார். பேராசிரியரின் அறிவுச் செல்வம் ஊருக்கு உதவியது. அது பொதுச் சொத்தாக மக்களுக்கு உதவியது. அவர் பொது மகன். அவர் பத்தோடு பதினொன்றாகக் கணிக்கப்படுவதில்லை. பாராட்டப்படுகிறார். ஏன் இந்தப் பாராட்டுகள் அவருக்கு? சமூகம், பண்பாடு, மொழி, இலக்கியம் பற்றி விரிவாகச் சிந்தித்துப் புதிய அறிக்கைகளைத் தந்துள்ளார். நூல் எழுதுவது எல்லோருக்கும் பொதுவானதுதான். பேராசிரியர் கா. சிவத்தம்பி தமிழுலகுக்குக் கிடைத்த அரிதான ஆய்வாளர், ஆய்வுத்துறையில் முக்கிய தடங்களை ஏற்படுத்திக் காட்டியவர் அவர் ஒருவர் தான். நானவரது மாணவனல்ல. இருந்தும் அவரது மாணவன் எனக் கூற விரும்புகிறேன். நூல்களைப் படிக்கிறேன். மூடிக் கிடந்த பழைய தமிழ்ச் சிந்தனை மரபை உடைத்து தமிழியச் சிந்தனையில் அறிவொளியை ஏற்படுத்தியவர். முதன் முதல் தமிழ்ப் பாரம்பரியத்துகுப் புதிய சிந்தனை வெளிச்சத்தைக் கொண்டு வந்து தமிழ்த் திறனாய்வுத்துறைக்கும் புதிய பாதையை அமைத்தவர். தமிழகத்தில் நா. வானமாமலை, இலங்கையில் பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோர் மார்க்சிய அடிப்படையில் இப் பணியை தொடர்ந்தனர். தமிழ் ஆய்வில் பல்துறை அணுகு முறையை ஏற்படுத்தினர். புதிய கருத்துக்களை சிவத்தம்பி வெளியிட்டார். இங்கு வருகை தரும் வெளிநாட்டு அறிஞர்களை ஈடு செய்யக்கூடிய தகைமை சிவத்தம்பிக்கே உண்டு, அரசியல், இலக்கியம் என்பவற்றை சொல்லக் கூடிய ஆளுமை அவரிடமேயுண்டு. இப்படியானதொரு ஆளுமையுடைய கல்விமானைத் தமிழ் நாட்டில் கூட காண முடியாது. மிக விரிவாகச் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைத்தார். தனது கலாநிதிப் பட்டத்துக்காக நாடகத்தை ஆய்வு செய்தார். விவரணப் பாங்கான ஆய்வு முறைகளே முன்பிருந்தன. காரணகாரியத் தொடர்புகளை ஆய்வு செய்தார்.
நவீன இலக்கியத்தில் சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவும் முக்கியமான ஆய்வு நூலாகும். அதே போல் நாவலும் வாழ்க்கையும் முக்கிமானது. யாழ் சமூகம் பற்றிய ஆய்வு உண்மையான பார்வையைக் கொண்டது.
இனத்துவ முரண்பாடு தொடர்பாகவும், அரசியல் பற்றியும் நிறையவே சிந்தித்து பல கட்டுரைகளை பத்திரிகையில் எழுதியுள்ளார். அவற்றையும் நூலாக கொண்டு வருவதுடன் அவற்றை ஆங்கிலத்திலும் கொண்டு வருதல் அவசியமானதாகும். கொழும்பு சாஹிரா கல்லூரியில் படித்தவர் சிவத்தம்பி. தமிழ் முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் அவர் செய்த ஆய்வு மிக முக்கியமான

No comments:

Post a Comment