பேராசிரியர் கா. சிவத்தம்பி-இரங்கல் குறிப்பு:- தோழர் சுகு
எமது கலை இலக்கிய தளத்தில் சமூகத்தில் ஆதிக்கம் பெற்றவர்களின் இலக்கியம்தான் சமூகத்தின் இலக்கியம் என்ற நிலையை மாற்றுவதில் பெருவாரியான மக்களின் இலக்கியம், சாதார பாமர மக்களின் இலக்கியம்தான் சமூக அபிலாசைகளை நியாயமாக பிரதிபலிப்பவை என்பதை ஈழத் தமிழ் இலக்கிய பரப்பில் அறிவுபூர்வமாக நிறுவியவர்களில் பேராசிரியர் சிவத்தம்பி சிறப்பிடம் பெறுபவர்.தமிழக முற்போக்கு இலக்கிய பரப்பிலும் அவர் நன்கு அறியப்பட்டிருந்தார்.
தமிழ் மொழிக்கு ஒரு கனதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அறிவு சார்ந்த வகையில் மொழியின் வளர்ச்சி பற்றியும் அக்கறை செலுத்தியவர்.
சாதாரண மக்களின் வாழ்க்கை அவலங்களை கலை இலக்கியங்களுடாக பிரதிபலித்தவர்களை உற்சாகப்படுத்தி உலகுக்கு அறித்தருவதில் அவர் புலமைத்துவ பங்களிப்பை செய்திருந்தார்.
தமிழை உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் ஆராய்ச்சி அறிவுபூர்வமாக நிலைநிறுத்துவதற்கு பங்களித்திருந்தார்.
அவர் உலக இலக்கிய அனுபவத்துடன் எமது தமிழ் இலக்கிய பரப்பை உள்ளுர் தமிழகம், உலகளாவியளவிலும் புலம் பெயர் தளத்தில் என அவதானம் செலுத்தியவர்.
அன்னாரின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலை அன்னாரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ன
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ன
No comments:
Post a Comment